குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரண வழக்கில் ட்விஸ்ட்.. பாஜக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2024, 4:48 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை நிறுவனர் பாஜக முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ் என்பவர், மது போதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 5ஆம் தேதி அன்று சித்தாமூர் கிராமத்தில் சேர்ந்த ராஜசேகர்(38) என்பவர் அதிகம் குடிப்பழக்கம் உள்ளதால் ராஜசேகர், குடும்பத்தினர் லோட்டஸ் பவுண்டேஷன் மது போதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் மர்மமான முறையில் இறந்து உள்ளார்,மது போதை மையத்தின் உரிமையாளர் ராஜசேகரை உடலை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவர் பரிசோதனை செய்த போது அப்போது ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில் ராஜசேகர் மனைவி ராஜாமணி தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போலீசார் ராஜசேகர் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, கொலையா என்பது பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது மது போதை மையத்தில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், ராஜசேகரை மது போதை மையத்தில் உரிமையாளர் காமராஜ், உள்ளிட்ட 6 பேர் கொண்ட நபர்களால் ராஜசேகரை தாக்கியதால், உயிரிழந்து உள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
ராஜசேகருக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. அடித்ததால் உயிரிழந்து உள்ளார் என்பது தெரிய வந்தது, போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து லோட்டஸ் ஃபவுண்டேஷன் மது போதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் நிறுவனர் முன்னாள் பாஜக மாவட்ட துணைத் தலைவருமான காமராஜ், மையத்தில் பணியாற்றும் கௌசிபாட்ஷா, எத்திராஜ், பிரவீன்குமார், ஜமால், ஆனந்தராஜ், ஆறு பேர் கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தி, கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
குச்சி பாளையத்தில் உள்ள லோட்டஸ் பவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனநிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் அவர்களின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் 23 பேரும் விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் மது போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது
மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வந்தவரை ஆறு பேர் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது