சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்.. கண்கலங்கிய கணவர்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2024, 1:52 pm

சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த நிலையில் ஹேம்நாத் தான் தங்களது மகளைக் கொலைசெய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

மேலும் மரணத்தில் ஐயம் இருப்பதாக அப்போதே சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் பிணையில் வெளியே வந்தார்.

மேலும் இந்த வழக்கானது திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பானது மகிளா நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ரேவதி வழங்க உள்ளார்

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் இரு தரப்பும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு கணவர் ஹேம்நாத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என சாட்சிகள் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதால் அவள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!