தருமபுரம் ஆதீனம் போலி ஆபாச வீடியோ வழக்கில் ட்விஸ்ட்.. தலைமறைவாக இருந்த செந்தில் கைது!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2024, 11:40 am
தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஆதீன கர்த்தரின் முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 4 மாதமாக தேடப்பட்டு வந்த செந்தில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருந்தது அறிந்து தனிப்படையினர் அங்கு வைத்து கைது செய்தனர்.
தருமபுரம் மடாதிபதி தொடர்பான ஆபாச வீடியோக்கள் இருக்கிறது என்றும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டிய வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்டவர் செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.