ஏரியில் மிதந்த பெண் சடலம்…கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்: தற்கொலை வழக்கில் திருப்பம்..!!

Author: Rajesh
17 March 2022, 9:23 am

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கட்டிட தொழிலாளியின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசி நாடகமாடிய கொலையாளிகள்பிரேதபரிசோதனையில் கொலை செய்தது
தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள சிறுங்காவூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுங்காவூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பக்கிரிசாமியின் மனைவி விஜயலட்சுமி அங்கு உள்ள ஏரியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து உயிர் உயிரிழந்து இருக்கலாம் என்ற கோணத்தில் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஏரியில் தனியாக மீன் பிடித்துக் கொண்டு இருந்த விஜயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து காவல்துறையினரை திசைதிருப்ப ஏரியில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை விவரங்கள் வெளியாகும்என காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1247

    0

    0