பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் எழுதிய சம்பவத்தில் திருப்பம் : கிடைத்தது துப்பு? போலீசார் எடுத்த அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 12:32 pm

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.

பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர் பற்றிய தகவல்களை சேகரிக்க தனிப்படை அமைத்து உள் ளோம். பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தபால் நிலைய முத்திரை அந்த கடிதத்தில் இருப்பது தெரிய வந்தது.

எனவே அங்கு தபால் போட வந்தவர்கள் யார் என்பதை அறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் வகையில் மிரட்டல் தபால் கார்டு அனுப்பிய நபரின் அடையாளத்தை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுவாக மிரட்டல் கடிதத்தில் அனுப்புபவர்களின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டு இருக்காது. ஆனால் இந்த கடிதத்தில் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே யாரையாவது சிக்க வைக்கும் நோக்கத்தில் கடிதம் எழுதப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் கடிதம் எழுதிய நபரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ