ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.
இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த 5 பேரின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி முன்பு ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் மீதான அடுத்தக்கட்ட விசாரணை 20-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
p> மேலும் படிக்க: பிரபல நடிகர் வீட்டு முன்பு GUN SHOOT நடத்திய மர்மநபர்கள்.. காட்டிக் கொடுத்த CCTV.. அதிர்ந்த போலீசார்!!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.