நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?
Author: Udayachandran RadhaKrishnan9 April 2025, 8:56 am
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது பாஜகவில் மூத்த தலைவராக உள்ளார்.
இதையும் படியுங்க: நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜலந்தர் பகுதியில் வசித்து வரும் அவரது வீட்டில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமோ, அசம்பாவிதமே ஏற்பட்வில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மனோரஞ்சன் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது. அதில் ரிக்ஷா வண்டியில் வந்த இருவர் வெடி குண்டை வீசி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் ஐஎஸ்ஐஎஸ் சதித்திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.