பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பாஜக கடும் குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
22 January 2025, 9:59 am

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு: தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர், கடந்த ஜனவரி 19ஆம் தேதி இரவு, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். பின்னர், டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்துக்காக இரவு 11.30 மணிக்கு காத்திருந்தார்.

அப்போது அங்கு போதையில் வந்த நபர்களிடம், எலஹங்கா செல்லும் பேருந்து எங்கு வரும் என்று இப்பெண் கேட்டுள்ளார். இதனையடுத்து, பேருந்து வரும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று, இருவரும் அவரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர்.

Tamil woman gang raped in Bangalore

இதனையடுத்து, இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.

இதன்படி, கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் கணேஷ் (27) மற்றும் சரவணன் (35) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.

இது குறித்து பேசிய சித்தராமையா, “பாஜக ஆட்சிக் காலத்தில் எந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளும் நடக்கவில்லையா? பாலியல் வன்கொடுமை நடக்கக் கூடாது, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் சமூகத்தில் எப்போதும் தீய சக்திகள் இருக்கும்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் திடீர் விபத்து…பிரபல குணச்சித்திர நடிகர் மருத்துவமனையில் மரணம்…!

அவர்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகச் செயல்படுவோம். காந்தியால் உருவாக்கப்பட்ட சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய கொள்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்” என்றார்.

இந்த நிலையில், ‘அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கர்நாடகா பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply