கிரிப்டோகரன்சி மோசட் மூலம் முன்னாள் ராணுவ வீரர் சுமார் 9 கோடி அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியின் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (66). இவர் ராணுவ வீரர் ஆவார். மேலும், இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வுபெற்றார். இதனால், இவர் தனது ஒய்வூதியப் பணத்தை கிரிப்டோகரன்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதன்படி, இவர் கடந்த 2022ஆம் ஆண்டு இணையதளத்தில் அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை நம்பி, அந்த லிங்கைத் தொட்டு அதனை பின்தொடர்ந்துள்ளார். அதன்பின், அவருக்கு ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு, கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, அசோகன் தனது முதல் தவணையாக ரூ.10 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன்பின், கோவையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவிற்குச் சென்றுள்ளார். அங்கு நடிகை தமன்னா உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைப் பார்த்த அசோகன், தான் பேசிய அதே நபரிடம் தொடர்பு கொண்டு, கிரிப்டோ முதலீட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்ர். அதுமட்டுமல்லாமல், அசோகன் அவரது நண்பர்களான புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரையும் கிரிப்டோகரன்சி மூதலீட்டில் ஈடுப்படுத்தியுள்ளார்.
பின்னர், அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்ற கிரிப்டோகரன்சி நிகழ்ச்சிக்கு அசோகனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது, அங்கு நடிகை காஜல் அகர்வால் விருந்தினராக பங்கேற்று, நிகழ்ச்சியில் பல கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி உள்ளார்.
ஆனால், அசோகன் தனக்கு காருக்குப் பதிலாக பணம் வேண்டும் என ரூ.8 லட்சத்தை பணமாக பெற்றுக் கொண்டுள்ளார். இதன் பின்னர், அசோகன் மற்றும் அவரது நண்பர்கள் ரூ.2.50 கோடி வரை பல்வேறு தவணைகளாக அஷ்பே நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளனர்.
இதன்படி, அந்த நிறுவன கணக்கில் ரூ.9 கோடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அவர் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்த நிலையில், அது முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடன் பேசி வந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்தவித பதிலும் இல்லாமல் இருந்துள்ளது.
இதன் பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோகன், இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார், கோயம்புத்தூரைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின் (36) மற்றும் அரவிந்த் குமார் (40) ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து பென்ஸ் கார் மற்றும் முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வாய்தா வாங்கும் சீமான்.. விஜயலட்சுமி அளித்த ஆதாரங்கள்.. விரைவில் கைது?
இதனையடுத்து, அவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா மற்றும் ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளே வந்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷ் நடித்துள்ள குபேரா படத் தலைப்பு ஏற்கனவே தெலுங்கு படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை:…
சமீபத்தில் திரைக்கு வந்த DRAGON திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. வெளியான 6 நாட்களில் வசூலில் உலகளவில்…
இயக்குனர் பிரசாந்த் நீல் படத்திற்கு சிக்கல் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி ரிலீஸ்…
நாளை என்னால் ஆஜராக முடியாது, என்னை என்ன செய்ய முடியும் என சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், சீமான் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி:…
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே. 50 வருடமாக சினிமாவில் நடித்து…
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு…
This website uses cookies.