ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்தது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்: உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்தக் கடலில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கடற்கரையில் நீராடிய பிறகு, சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் புனித நீராடிவிட்டு வந்துள்ளார். பின்னர். குடும்பத்தினர் அனைவரும் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, வெளியில் இருந்த ஒருவர், இளம்பெண்ணைப் பார்த்து இலவசம் தான், உடை மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த ஐடி ஊழியரான அப்பெண், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா ஏதேனும் உள்ளதா என தனது செல்போனைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்.
அப்போது, அங்குள்ள டைல்ஸ் சுவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர், மற்ற அறைகளிலும் உள்ளதா என, அனைத்து அறைகளிலும் சோதானை செய்துள்ளார். அப்போது, அங்கு இருந்த 3 கேமராக்களை எடுத்து உள்ளார்.
பின்னர், உடையை மாற்றிக்கொண்டு, நேராக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில், கேமரா ஆதாரங்கள் உடன் அப்பெண் புகார் அளித்து உள்ளார். இதன்படி, மீரா மைதீன் (38) என்பவரை போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் தம்பியான்கொல்லை தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) மற்றும் மீரா மைதீன் (36) ஆகிய இருவரும் பெண்கள் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ‘நக்சல்களுடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு’.. இந்து மகா சபா பரபரப்பு புகார்!
இதனைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரா மைதீன் ஆகியோரது செல்போன்களைப் பறிமுதல் செய்து போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஏராளமான பெண்களின் உடை மாற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து போலீசார் ரகசிய கேமரா, செல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் மாதம் 2 கேமாரக்களும், டிசம்பரில் ஒரு கேமராவையும் அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு உள்ள குளியலறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகளை சோதனையிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.