கோவையில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டை: 2 பேர் கைது…வனத்துறையினர் விசாரணை..!!
Author: Rajesh6 April 2022, 11:04 am
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஆதிமாதையனூர் பகுதியில் காட்டுப்பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையில் ஈடுபடுவதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காரமடை வனசரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஆதிமாதையனூர் கருப்பராயன் கோவில் பின்புறம் உள்ள பள்ளத்தில் மூவர் காட்டுப்பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்ட போது சின்னச்சாமி(35), கவின்குமார்(24) உள்ளிட்டோரை வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட கிட்டான்(55) என்பவர் தப்பி ஓடியுள்ளார்.
பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும்,நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் நபர் குறித்தும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.