வலிமை பட பாணியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு : கோவையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 7:59 pm

கோவை : வலிமை திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போலவே திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). இவரும் இவரது பக்கத்து வீட்டு பையனும் (மைனர்- 17 வயது) சரவணம்பட்டி பகுதியில் ராகுல் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதால் சரவணம்பட்டி போலிசாரால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மார்ச் மாதம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படத்தை பார்த்து ஏதேனும் ஒரு குற்றசெயலில் ஈடுபட முடிவெடித்து திருட்டில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 11 இரு சக்கர வாகனங்களை திருடியதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாகவும் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஜீவானந்தத்திற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்கள் திருடிய 11 வாகனங்களில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள உரிமையாளர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1349

    0

    0