உறவினருடன் தனிமை.. திடீரென கேட்ட சத்தம்.. அடுத்து நடந்தது என்ன?

Author: Hariharasudhan
7 January 2025, 11:27 am

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தனிமையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் பெண், தனது உறவினர் ஒருவருடன் நேற்று மாலை, ஒரு கிராமத்தின் அருகில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இதனை நோட்டமிட்ட திருவெண்ணெய்நல்லூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இரு நபர்கள், அவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் இருவரும் விழித்துக் கொண்டுள்ளனர். பின்னர், வீடியோவில் பதிவு செய்த காட்சியை இருவரிடமும் காண்பித்து ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

Two arrested for threating a woman in Villupuram

இந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அது மட்டுமல்லாமல், தாங்கள் அழைக்கும் போது, பாலியல் உறவிற்கு வருமாறும் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். எனவே, இது குறித்து அந்தப் பெண், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: சிறுவன் ஸ்ரீதேஜ்க்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு ஓடிய அல்லு அர்ஜூன்!

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (25) மற்றும் திலீபன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • AR Rahman about Anirudh கொஞ்சம் இத பண்ணுங்க அனிருத்.. ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
  • Views: - 71

    0

    0

    Leave a Reply