பஸ் ஓட்ட சொன்னா, ரேஸ் ஓட்டராங்க : போட்டி போட்டு பேருந்தை இடித்து தள்ளிய மற்றொரு பேருந்து.. கடுப்பான பயணிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2023, 2:12 pm
கோவை வடவள்ளி – ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் 1சி எண் கொண்ட ஜெய்சக்தி மற்றும் முருகன் என்ற இரு தனியார் பேருந்துகள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரு பேருந்துகள் மாலை 5.45 மணியளவில் ஒண்டிப்புதூரில் இருந்து 5 நிமிட இடைவெளியில் புறப்பட்டன. போக்குவரத்து நொிசல் காரணமாக யார் முன் செல்வது எனக்கூறி இரு பேருந்து ஒட்டுநர்களுக்கு டைமிங் பிரச்னை ஏற்பட்டது.
இரு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு வேகமாக ராமநாதபுரம் சிக்னல் அடைந்தது. அப்போது, ஜெய்சக்தி பேருந்து சிக்னலில் முன் நின்று கொண்டிருந்தது.
அப்போது பின் வந்த, முருகன் பேருந்து ஒட்டுநா் வலதுபக்கம் முன்னேறி, பெண்கள் அமர்திருந்த வலது பகுதியில் வேண்டுமென்ற இடித்தார்.
இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெண்கள் முன் பகுதியில் ஏறும் பகுதியில் ஜன்னல் கண்ணாடி சிதலமடைந்தது.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் கையில் கண்ணாடி இடித்தால், கையில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சிக்னலில் பிரச்சை ஏற்பட்டது.
அங்கு இருந்த போக்குவரத்து போலீசார் பயணிகனை இறக்கவிட்டு, இரண்டு பேருந்துகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பேருந்தில் பயணத்தில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
வடவள்ளி பகுதியை சேர்ந்த, காயமடைந்த பெண் கூறும்போது, முருகன் பேருந்து வந்து மேதியதில் கண்ணாடி துகள்கள் என் கையில் குத்தியது. கை வீக்கம் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி பின் அமர்நிருந்த குழந்தைக்கும் அடிப்பட்டது.
குறிப்பாக, டைமிங் பிரச்னை என்றால், பேருந்து ஓட்டுநர்கள் பேசி தீர்த்துகொள்ளாமல், பல பேர் பயணிக்கும் பேருந்தில், வேண்டுமென்றே மோதுவது கொலை முயற்சியாகவே கருதப்படும்.
அதிர்ஷடவசமாக, சக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், பேருந்து ஒட்டுநர் இப்படி செய்வது பயணிகள் உயிருக்கு உத்தரவாதமாக இருக்க முடியாது.
எனவே, பேருந்து மீது மோதிய ஒட்டுநர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்க, பேருந்து முதலாளிகள் உரிய அறிவுரைகளை ஒட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்க வேண்டும், போக்குவரத்து துறையும் கண்காணிக்க வேண்டும்.என்றார்.
மற்றொரு பயணி ஒருவர் கூறும்போது, முருகன் பேருந்து ஒட்டுநர் குடிபோதையில் பேருந்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.