இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 4:33 pm

திருப்பூர் : பல்லடம் அருகே உடுமலை சாலையில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மாருதி 800 காரில் ராஜேந்திரன் என்பவர் தனது உறவினர்கள் ஜெயந்தி, சுலோச்சனா, சுசீலா, கமலா ஆகியோருடன் பல்லடத்திற்கு வந்து கொண்டொருந்தார்.

திருப்பூரில் இருந்து ரமேஷ் என்பவர் தனது 12 வயது மகன் கோகுலுடன் உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடம் அருகே உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் அருகே இரண்டு காரும் நேர் நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இரண்டு கார்களும் அப்பளம் போல நொருங்கின. இந்த விபத்தில் சுசீலா,கமலா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும்,தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜெயந்தி, சுலோச்சனா இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.12 வயது சிறுவன் கோகுல்,ரமேஷ்,ராஜேந்திரன் மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மதுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vijay Sethupathi Smash Bigg boss Contestants ஜெப்ரிக்குனா மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த VJS!
  • Views: - 1073

    0

    0