கட்சியில் இருந்து விலகிய இரண்டு கவுன்சிலர்கள்… அதிர்ச்சியில் திமுக : உற்சாகத்தில் அதிமுக!!
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு தலா 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர். பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராகிணியும், துணைத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில் தற்போது 2 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.