இருதம்பதிகளிடையே அடிதடி.. கட்டிப்புரண்டு தாக்கிக் கொண்ட சம்பவம்… போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 11:11 am

கன்னியாகுமரி அருகே கடனை திரும்ப கேட்டவரை அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். அரசு பேருந்து ஓட்டுனரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், தேவதாஸ் நேற்று மாலை தனது வீட்டின் முன் மீன் வலைகளை பின்னி கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்த சசிக்குமார் தேவதாஸ்-ஐ தகாத வார்த்தைகள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதை கண்ட தேவதாஸ் மனைவி தடுக்க வந்த நிலையில், இரு தரப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கட்டிப்புரண்டு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார், தேவதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தில் வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் மற்றும் தேவதாஸ் குடும்பத்தினர் கட்டிப்புரண்டு தாக்கி கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://player.vimeo.com/video/764037802?h=84736fc7f6&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 732

    0

    0