இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 3:24 pm

இருவேறு விவசாய சங்கங்கள் ஒரே நேரத்தில் ரயில் மறியல்.. வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்றதால் பரபரப்பு!

விழுப்புரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பிரதமர் மோடி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் பஞ்சாப் எல்லையில் டெல்லியை நோக்கி அறவழிப் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக எழுவதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயிலை மறிக்க முயற்சி செய்தனர்.

அப்போது நின்று கொண்டிருந்த ரயிலை நோக்கிச் சென்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே இவர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற போது மற்றொரு சங்கமான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் திடீரென அவர்களும் ரயில் நிலையத்திற்குள் வர முற்பட்டனர்.

அப்பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டனர் ஆனால் அப்பொழுது வந்தே பாரத் ரயில் வரவே அந்த ரயிலை நிறுத்த விவசாயிகள் முயன்றனர்.

அப்பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதற்குள்ளாக வந்தே பாரத் ரயில் செல்லும் வரை விவசாயிகள் நிறுத்தப்பட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் முன்பு சென்றவாறு ரயில் முன்பாக அமர முயற்சி செய்தனர் அப்பொழுது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை தள்ளி அழைத்து வந்து கைது செய்தனர்.

இந்த இரண்டு விவசாய சங்கங்களும் ஒரே நேரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ