சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் கீழ் குறைந்துள்ளது.
அதாவது, 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 40 ஆயிரத்து 531ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 294 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,956 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
இன்று 5,374 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 75 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 296 பேருக்கும், கோவையில் 227 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும், திருப்பூரில் 66 பேருக்கும், சேலத்தில் 52 பேருக்கும், ஈரோட்டில் 77 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.