கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 9:52 pm

கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!!

கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய இரண்டு பெண் மாவேயில்டுகள் தமிழகதிற்குள் ஊடுருவலா என தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர்.

மேலும் நடைபெற்ற சண்டையில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டடிப்பட்ட நிலையில் தப்பி ஓடினர். தப்பியோடிய 2 பெண் மாவோயிஸ்டுகளான சுந்தரி, லதா ஆகிய இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் குண்டடிபட்டு தப்பியோடி தலைமறைவு ஆகியுள்ள இரண்டு பெண் மாவோயிஸ்ட்களும் தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாம் என தமிழக எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்ட எஸ்பி தலைமையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே அமைந்துள்ள தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுயும், தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ