அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் இருவர் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2023, 7:39 pm
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!!
திருவாரூர் நகரில் ஏங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் வேலங்குடி மற்றும் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவியர் அங்கு விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ஆதரவற்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சிறப்பு வகுப்புக்கு செல்வதாக சக மாணவிகளிடம் சென்று கூறியுள்ளனர்.
பின்பு விடுதியில் இருந்த மாணவிகள் இவர்கள் இருவரையும் காணாமல் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த தகவலின் பெயரில் பள்ளி தாளாளர் சாந்தி பள்ளி வளாகம் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிய பிறகு இருவரும் கிடைக்காததால் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விரைந்து சென்ற நகர காவல் நிலைய போலீசார் அவர்கள் தங்கி இருந்த விடுதியை ஆராய்ந்த பொழுது அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகவும் அதில் எங்களுக்கு இங்கு தங்கி படிக்க விருப்பமில்லை எனவும் எங்களை யாரும் தேட வேண்டாம் எனவும் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் இவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் நகரில் உள்ள பிரபல பள்ளியில் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் மாயமானது இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 13 வயதான இரண்டு மாணவிகள் மாயமான திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.