எப்போதும் ஒன்றாக இருக்கும் நெருங்கிய தோழிகள் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
11 December 2024, 3:53 pm

திருப்பூரில் எப்போதும், எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் தோழிகள் ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மருதாச்சல மூர்த்தி. இவருக்கு அவந்திகா(19) என்ற மகள் இருந்தார். இந்த அவந்திகாவும், ரமேஷ் என்பவரது மகள் மோனிகாவும் (19) நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

மேலும் தோழிகள் இருவரும் பகுதி நேரமாக பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (டிச.11) மாலை அவந்திகா வீட்டிற்கு மோனிகா சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர்.

Two female friends suicide in Tiruppur police investigating

அப்போது, அங்கு உள்ள ஒரு அறையில் அவந்திகாவும், மோனிகாவும் தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தோழிகளின் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Two female friends suicide in Tiruppur

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோனிகாவும் அவந்திகாவும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்களாம். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்களாம். ஆனால் இருவரின் பெற்றோர், ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்க மாட்டார்கள் என்றும், எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் இரண்டு பேரும் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: எந்தவொரு செயலுக்கும் தற்கொலை தீர்வல்ல. அவ்வாறு தற்கொலை தொடர்பான எண்ணங்கள் தோன்றினால் உடனடியாக மனநல ஆலோசனையை பரிந்துரைக்கப்பட்ட உளவியல் மருத்துவர்களிடம் பெறவும்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 41

    0

    0

    Leave a Reply