ஆள் பாதி,.. ஆடை பாதி:காலி குடங்களுடன் கவனத்தை ஈர்த்த போராட்டம்!!!
Author: Sudha2 August 2024, 5:15 pm
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் மொரப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் ஒருவர் நூதன முறையில் உடை அணிந்திருந்தார்.
மொரப்பூர் ஒன்றியம் M.வேட்ரப்பட்டியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைகளாக மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து இரண்டு நபர்கள் சந்தைமேடு பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் கையில் பதாதைகளை ஏந்தி, காலி குடங்கள், மண் அடுப்பு, உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரை அப்புறப்படுத்தினர்.
நூதனமான முறையில் உடைகளை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.