திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த தள்ளுமுள்ளு… இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!!!

Author: Hemalatha Ramkumar
4 செப்டம்பர் 2024, 3:46 மணி
Quick Share

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக தொண்டர்கள் முண்டியடித்துச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு சூழல் நிலவியது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டத்தின் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ டாக்டர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, வழங்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி சாப்பிட முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி கீழே சிலர் தடுமாறி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் மயக்கம் அடைந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணிக்காக முந்தி அடித்துக் கொண்டு சென்ற போது தடுமாறி கீழே விழுந்து இரண்டு பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 139

    0

    0