இனி இந்த பேச்சே வேண்டாம்.. தந்தையை இரும்பி கம்பியால் அடித்து கொன்ற இரு மகன்கள் : தூண்டுதலாக இருந்த தாயும் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2022, 6:02 pm
செங்கம் அருகே குடும்ப தகராறில் மகன்களே தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன், சக்திவேலுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்ட போது சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானிப்பாடி காவல் துறையினர் சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து மகன்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் உறுதுணையாக இருந்த மனைவி அன்னக்கிளி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக்காக மகன்களே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் தானிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது