நேருக்கு நேர் மோதிய இருமாநில அரசு பேருந்துகள் : கோர விபத்தில் கேரள ஓட்டுநர் பலி.. வெளியே வரமுடியாமல் அலறிய பயணிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2024, 5:45 pm
நேருக்கு நேர் மோதிய இருமாநில அரசு பேருந்துகள் : கோர விபத்தில் கேரள ஓட்டுநர் பலி.. வெளியே வரமுடியாமல் அலறிய பயணிகள்!!
குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு தமிழக அரசு பேருந்து ஒன்று மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லக்கூடிய கேரள அரசு பேருந்து மேம்பாலத்தின் வழியாக வந்துள்ளது. அதிவேகமாக வந்த மேம்பாலத்தின் மேல் வைத்து நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் கேரள பேருந்து ஓட்டுனர் இறந்த நிலையில் பேருந்துகளில் பயணம் செய்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிருக்கு போராடியபடி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும் தமிழக அரசு பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக மார்த்தாண்டம் மேம்பாலத்தின் பல மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாலத்தின் மேல் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0