காரில் வந்தவரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. கோவையில் அதிகரிக்கும் அட்ராசிட்டிஸ்… 2 பேரை கைது செய்து சிறையிலடைப்பு
Author: Babu Lakshmanan11 February 2023, 11:34 am
கோவையில் காரில் வந்தவர்களிடம் அத்துமீறிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார் . இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருக்கின்றார் . அப்பொழுது தனது தனிப்பட்ட பணியை முடித்துவிட்டு 11 மணியளவில் வீடு திரும்பும் பொழுது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகே உள்ள ஏழாவது வீதியில் பயணித்திருக்கின்றார் .
அப்போது அங்கு இருந்த வேகத்தடை முன்பாக மெதுவாக வாகனம் ஏறி இறங்கிய பொழுது அருகாமையில் இருந்த இரண்டு அடையாளம் தெரியாத திருநங்கைகள், காரை மறித்து பணம் தரும்படி கேட்டிருக்கின்றனர். பணம் தர வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் சொல்லி மிரட்டி திட்டியதாகவும் கூறப்படுகின்றன.
பிரதாப் சந்திரன் பாக்கெட்டில் இருந்த 2000 ரூபாய் பணத்தையும் பறித்து சென்றிருப்பதாக தெரிகின்றது.
இந்த நிலையில் மன உளைச்சல் ஏற்பட்ட பிரதாப் சந்திரன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் வனிஷா, ரம்யா என்ற இரண்டு நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.