காட்பாடி பாலத்தில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி… ஆனால்? எம்பி கதிர் ஆனந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 9:01 pm

ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த காட்பாடி பாலம் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி என எம்பி கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்தது . தற்போது , பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்ற நிலையில் உள்ளது.

பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் மிகவும் சிரமப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு நாளை முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

4ஆம் தேதி முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் செல்லலாம். சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என வேலூர் எம். கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடித்த அதிகாரிகள் , பணிக்காக ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?