அட இதெல்லாம் கூடவா..? இருட்டில் பைக்கை நிறுத்திவிட்டு இருபெண்கள் செய்த செயல் : வெளியானது சிசிடிவி காட்சிகள்..!

Author: Babu Lakshmanan
20 September 2022, 7:04 pm

கன்னியாகுமரி : முளகுமூடு பகுதி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், பைக்கை நிறுத்தி விட்டு, கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் போரிஸ். இவர் தனது வீட்டின் பக்க சுவர்களில் விலையுயர்ந்த பூச்செடிகளை தொட்டியில் நட்டு வளர்த்தி வருகிறார். நேற்று முன்தினம் போரிஸ் மனைவியுடன் வெளியூர் சென்று நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த 10 பூச்செடிகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் அந்த செடிகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் பெண்கள் பூச்செடிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/751679739?h=593b366baf&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Pradeep Ranganthan Next Movie Announcement இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!