அண்டாவில் குழந்தை.. அலறிய பெற்றோர்.. தூத்துக்குடியில் சோகம்!

Author: Hariharasudhan
3 February 2025, 1:57 pm

தூத்துக்குடி அருகே, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அண்டாவில் கவிழ்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் – காஞ்சனாதேவி தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதில் சபீனா பானு என்ற மகள் இருந்தார். இந்த நிலையில், இக்குழந்தை அண்டாவில் நிரம்பியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக, அண்டா தண்ணீரில் குழந்தை தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையின் சத்தம் நீண்ட நேரமாக கேட்காமல் இருந்துள்ளது. எனவே, சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர்.

அப்போது, அண்டா தண்ணீரில் குழந்தை மூழ்கிக் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், அண்டாவில் கிடந்த குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர், குழந்தையை பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

Two year old baby died after fallen Andaa in Thoothukudi

இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தயைக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பெற்றோரை சோகத்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Actor Manikandan latest news ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!
  • Leave a Reply