டேய்.. வண்டி ஓட்ட தெரியுமா? தெரியாதா?.. அரசு பேருந்து ஓட்டுனரை கற்களால் தாக்கிய 2 இளைஞர்கள்..!

Author: Vignesh
27 August 2024, 1:10 pm

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானலில் தமிழக அரசு போக்குவரத்து கழகம்தில் ஓட்டுனராக பணிபுரியும் ரவி வயது 56 இவர் புதுக்கோட்டையில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டையில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஷேக் முகமது வயது 22 பாசித் வயது 19 மதுரையை சேர்ந்தவர்கள். இருசக்கரத்தில் அரசு பேருந்தை தொடர்ந்து வந்து செண்பகனூர் பகுதியில் வழிமறித்து நிறுத்தி பேருந்து ஓட்டுனரை உனக்கு வண்டி ஒழுங்கா ஓட்ட தெரியாதா? என்று தகாத வார்த்தையில் பேசி ரவி பேருந்து ஓட்டுநர் மற்றும் திருப்பதி பேருந்து நடத்தினரையும் கற்களால் தாக்கி உள்ளனர்.

இருவருக்கும் காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவம் அறிந்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சார்பாய்வாளர் நீலமேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!