டைப்ரைட்டிங் பயிற்சி மையத்தில் சில்மிஷம்… மாணவிகளை ஆபாசமாக போட்டோ எடுத்து ரசித்த முதியவர் போக்சோவில் கைது…!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 11:17 am

திருச்சி அருகே டைப்ரைட்டிங் பையில வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உரிமையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (68). இவர் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டியூட் வைத்து நடத்தி வருகிறார்.

டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டிற்கு பயில வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் என பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல் சத்தியமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், அவர்களின் அங்கங்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் மங்கையர்கரசி சம்பவம் குறித்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…