உதயநிதி துணை முதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து : ஹெச் ராஜா எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
21 July 2024, 7:21 pm

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

திண்ணைப்பள்ளியில் எல்லோருக்கும் பொதுவாகவும், தானமாகவும் கல்வி கிடைத்தது; இது தான் சனாதன பாரம்பரியம். சனாதானத்தை பற்றி எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேடத்தை கொலை செய்தது ஏன்?. ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார்.

இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பகட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!