ஆட்சி காலியாகும் என தெரிந்தேதான் உதயநிதி பேசியுள்ளார் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 7:50 pm

ஆட்சி காலியாகும் என தெரிந்தேதான் உதயநிதி பேசியுள்ளார் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல் , சட்ட மன்ற தேர்தல் சேர்ந்து வரும் என்ற நிலை தான் இப்போது உள்ளது. நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல் ஒன்றாக வரும் நிலையில் மக்களின் பாதிப்பு நிலை, போதை பொருள் , கடத்தல் என தமிழ்நாடு அரஜகமாக சீரழிந்து உள்ளது.

ஆளுங்கட்சி அராஜகம், அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறது, இது குறித்து எடுத்து சொல்வோம். நம் ஆட்சி சாதனைகள் தமிழகத்தில் உள்ளது, அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் , லேப்டாப் எல்லாம் செயல் படுத்தப்படமல் குழி தோண்டி புதைத்து விட்டனர். வருவாய் கூடி உள்ளது அரசுக்கு ஆனால் திட்டங்களை நிறுத்தி விட்டனர். கோடிக்கணக்கில் கடன் வாங்கி உள்ளனர்.

மக்களுக்கு நன்மை செய்யாத மோசமான அரசு இந்தியாவில் திமுக தான். கடுமையான எதிர்ப்பு அலை திமுக விற்கு உள்ளது, அவர்கள் தொகுதிக்கு செல்ல முடியாது. ஆட்சி சாதனைகளை எடுத்து சொல்வோம்.

உதயநிதி ஸ்டாலின் ஆட்சி போனால் போகட்டும் என்று பேசியது, ஆட்சி காலியாகும் என்று தெரிந்து தான் சொல்கிறார் என கூறினார்.

மின்சாரக் கட்டணம் பன் மடங்கு உயர்ந்து உள்ளது, 2000 கட்டியவர்கள் 7000 மின் கட்டணம் கட்டுகிறார்கள். சொத்து பதிவு கட்டணத்தை ஏற்றிவிட்டனர். ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது அந்த மன்னன் பியானோ வாசித்தது போல் உள்ளது.

1947 க்கு பிறகு அம்மா ஆட்சி தான் சிறப்பாக இருந்தது, 50 சதவீதம் பெண்கள் இட ஒதுக்கீடு யார் கொடுத்தார். 61 % இட ஒதுக்கீடு. ஆதி திராவிடர் சமூகத்தினர் பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வைத்தவர்.

சமத்துவம் எது சமூக நீதி என்று திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி இடம் கேளுங்கள் பட்டம் கொடுத்தது அவர் தான். இளம் கன்று பயம் அறியாது சனாதனம் என்றால் என்ன என்றே தெரியாது.

மதத்தை இழிவு படுத்துவது சரி அல்ல, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளது. மனிதனை நல் வழிப்படுத்தும் நல்ல விசியங்கள் மதத்தில் உள்ளது.

சி பி ஐ ராஜா, சீத்தாராம் யெச்சூரி போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இந்தியா கூட்டணியில் தலைவர் ஆக்க வேண்டியது தானே? உங்கள் முதுகில் பெரிய அழுக்கை வைத்து கொண்டு நாங்கள் தான் சீர் திருத்தவாதி என்று சொல்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதிமுக சந்திக்க தயாரா என்ற கேள்விக்கு, ஒட்டு மொத்த தேர்தலுக்கு 11 கோடி தான் அன்று செலவு இப்போது ஒரு தேர்தலுக்கு 60 ஆயிரம் கோடி செலவு.

தேர்தல் போது பள்ளிக் கல்வித்துறை தான் பாதிப்பு அடையும், பள்ளியில் வாக்கு இயந்திரம் வைப்பது, ஒலிபெருக்கியால் பாதிப்பு உண்டு. தமிழ்நாடுக்கு மிகப்பெரிய தீபாவளியாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும், தேர்தலை எதிர்கொள்ள எந்த சூழலிலும் அதிமுக தயாராக உள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கில் இயற்க்கை வழங்காமல் சுரண்டப்பட்டுள்ளது 60 க்கும் மேற்பட்ட சாட்சியில் 9 பேர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார்கள், அரசு அதிகாரிகள் அரசுக்கு எதிராக எப்படி சாட்சி சொல்லுவார்கள் வழக்கறிஞர்களும் திமுகவுக்கு சாதகமாக உள்ளனர். நியாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக என்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

//////…

  • தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!
  • Views: - 304

    0

    0