அமைச்சரான பின் முதன்முறையாக கோவை வந்த உதயநிதி : நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த அடிக்கல்..!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2022, 2:33 pm
கோவை நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் தற்போது அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அமைச்சராக பதவி ஏற்று முதல் முறையாக கோவைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று நடக்கவிருக்கும் 3 அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
முதல் நிகழ்ச்சியாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் பணிக்காக 6.55 கோடியும் மற்றும் விளையாட்டு அரங்கை மேம்படுத்த சிறப்பு மராமத்து பணிகளுக்காக 65.15 லட்சம், மதிப்பிலான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதனை இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து கோவை கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.