உதயநிதியின் கார் கமலாலயம் வர தகுதி இல்லை.. அப்படி முயற்சித்தால் கார் ஸ்டார்ட் ஆகாது : அண்ணாமலை சாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 5:50 pm

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய போது,
2006-2011 வரை இருந்ததுபோல் இருண்ட கால ஆட்சி போல இருக்கிறது.

2.22 கோடி டன் கோல் இருப்பு உள்ளது. தமிழகத்தில் மட்டும் வினோதமாக எப்படி மின் வெட்டு வருகிறது. செயற்கை மின்வெட்டை திமுக அரசாங்கம் ஏற்படுத்துகிறது என குற்றம்சாட்டினார்.

தனியாரிடம் மின்சாரத்தை வாங்க திமுக திட்டமிட்டுள்ளது என கூறிய அவர்,
செந்தில் பாலாஜி தமிழகத்திற்கு 22 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்கிறார்.

குறிப்பாக அமைச்சர்களுக்கு கமிஷன் வர திட்டமிடப்பட்டுள்ளது. Tangedco பல லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த நூதன திருட்டுக்கு சுழி போட்டது திமுக அரசு. இது தமிழகத்தை ஆண்ட அனைத்து அரசுகளையும் குற்றம் சாட்டுகிறேன்.

8 -10 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்ய பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சர்களுக்கு சோலார் அமைக்க 20 லட்சம் கமிசன் கிடைக்கிறது.

16 ஆண்டாக ஸ்கெட்ச் போட்டு ஊழல். கடிதம் எழுதுவது மட்டும் தான் முதல்வரின் வேலை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சுமத்துவது நிதி எதிர்பார்ப்பது என்றால் எதற்கு அரசு நடத்த வேண்டும்.

பொதுமக்கள் மின்சார பிரச்சனைக்காக யு பி எஸ், ஜெனரேட்டர், பிளேண்ட் அமைத்து கொள்ளுங்கள். விக்னேஷ் மரணம் காவல் நிலைய கொலை இல்லை என்றால் ஏன் விக்னேஷ் குடும்பத்திற்கு போலீசார் பணம் கொடுத்து இருக்க வேண்டும்.

2023க்குள் தமிழக மக்கள் மின்நிலையத்தையே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். குடும்ப வருமானத்தை பெருக்க டேன்ஜெட்கோ திமுக அரசு நடத்துகிறது.

டேன்ஜெட்கோ நஷ்டத்தில் இருப்பது குறித்து 2006 முதல் வெள்ளை அறிக்கை வேண்டும். அதிமுக திமுக என யாராக இருந்தாலும் சரி. இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்த பின்பு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம். அரசியல் சாக்கடைக்குள் இளையராஜாவை அழுத்த வேண்டாம். தமிழகத்தில் கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

முக கவசத்திற்கு 500 ரூபாய், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் காலை கைது மாலை விடுதலை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அருகே சட்டத்துறை அமைச்சர் அமரக்கூடாது. காவல்துறை முதல்வருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடத்த கூடாது.

டிஜிபி வாயை மூடி இருக்கிறார். பத்து மாத காலமாக சிறந்த காவல்துறை என்பதை தமிழகம் இழந்து வருகிறது. உதயநிதியின் கார் கமலாலயம் வர தகுதி இல்லை.
சினிமா படத்தில் நடிப்பதை குறைத்து மக்கள் பணி செய்யட்டும். ரஜினி படத்தில் வருவது போல் கமலாலயம் வர உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்தால் கார் ஸ்டார்ட் ஆகாது, இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 1257

    0

    0