உதயநிதி பேச்சை திமுக ஐடி விங் கேட்கவில்லையா? தமிழகம் முழுவதும் பரபரப்பான அரசியல் களம்!
Author: Hariharasudhan21 February 2025, 2:10 pm
உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை நோக்கி எழுப்பிய கேள்வி, திமுக ஐடி விங்கால் திருப்பி விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ’தமிழ் வாழ்க’ என்ற மஞ்சள் நிற போஸ்டரில் இந்தி மொழியை அழித்தவாறு இருப்பதை, இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பார்த்திருக்கலாம். குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இந்த சுவரொட்டியே இன்று அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
அதேநேரம், Get Out Stalin என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர், பாஜகவினர். காரணம், நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சவால் விட்டிருந்தார். அதில், காலை 6 மணி முதல் யார் அதிக ஹேஷ்டேக்குகளைப் பெறுகிறார்கள் என்று.
இதன் மூலம், திமுகவுக்கு எதிர்ப்பா அல்லது இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் பாஜகவுக்கு எதிர்ப்பா என்ற முடிவு தெரியவரும் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், இன்று அண்ணாமலை இந்த ஹேஷ்டேக் போரைத் துவக்கிய நிலையில், இன்று முதல் திமுகவினர் இதனை துவக்கவில்லை.
ஆனால், நேற்றே Get Out Modi என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில் தான், அதாவது சவால் விடுத்த மறுநாளான இன்று இம்மாதிரியான போஸ்டர்கள் எந்தவித பெயர் அடையாளங்களும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இதனை திமுக ஐடி விங் ஷேர் செய்து வருகிறது.
உதயநிதி பேச்சு என்னாச்சு? இதன்படி பார்த்தால், திமுகவினரே இதனைச் செய்துள்ளனர் என ஒரு தரப்பு கூறுகின்றனர். அப்படி பார்த்தால், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மரியாதை இல்லையா என பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர். காரணம், “நீங்க சரியான ஆளா இருந்தால், உங்கள் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் வீட்டின் வெளியே ‘பால்டாயில் பாபு’ என போஸ்டர் ஒட்டுவேன்” என அண்ணாமலை பேசினார்.
இதையும் படிங்க: OMR சாலையில் மீண்டும் கல்லூரி மாணவர்களால் பறிபோன உயிர்.. எப்படி நடந்தது?
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், “அது அவர்களின் தரம். பிரச்னையை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கும் நிதியை வாங்கித் தருவதற்கு துப்பு இல்லை. போஸ்டர் ஒட்டுவது எல்லாம் ஒரு சவாலா? வீட்டில் தான் இருப்பேன், வரச் சொல்லுங்கள்” எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு ‘போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு சவாலா?’ என உதயநிதி கேள்வி எழுப்பிய நிலையில், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை திமுக ஐடி விங் ரீட்வீட் செய்து வருவது, பல்வேறு கேள்விகளை திமுகவுக்குள் எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.