யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு… மறுதேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2025, 10:22 am

தேசிய தேர்வு முகமை (NTA) யுஜிசி நெட் தேர்வுகளை கலை மற்றும் அறிவியல் உள்பட 85 பாடங்களுக்கு ஆண்டு இருமுறை நடத்துகிறது. இத்தேர்வு கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கைக்கான தகுதி தேர்வாகும். டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் டிசம்பர் 11 வரை பெறப்பட்டன.

இதையும் படியுங்க: பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு… 2 குழந்தைகளுடன் தவித்த வெளிநாட்டு பயணி!

தேர்வுகள் ஜனவரி 3 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதில், மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15) மற்றும் காணும் பொங்கல் (ஜனவரி 16) ஆகிய நாட்களில் பல பாடங்களுக்கான தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த முடிவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. தேர்வு தேதிகளை மாற்ற கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஜனவரி 15-ம் தேதிக்கான யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…