அல்டிமேட் ஸ்டார் அஜித் பிறந்நாளை முன்னிட்டு மே 1ம் தேதி டபுள் ட்ரீட் : அமர்க்களப்படுத்த ரசிகர்கள் தயாரா?!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2022, 5:56 pm
மே 1ம் தேதி அஜித் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வெளியான படம் வலிமை. குடும்பத்தினரை ரசிக்க வைத்த வலிமை திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிசில் 235 கோடி ரூபாய் அள்ளியது.
ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகியிருந்தது. ஏற்கனவே நேர் கொண்ட பார்வை இவர்கள் கூட்டணியிலே உருவானது.
இந்த நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் அடுத்த படத்தில் அஜித் நடித்து வருகிறார். ஷீட்டிங் ஐதரபாத்தில் ஆரம்பமானது.மேலும் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த தினத்தையொட்டி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வலிமை படம் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மார்ச் மாத இறுதியில் வலிமை ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டிவியில் ஒளிபரப்பாவதால் டிஆர்பியில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித் பிறந்தநாளன்று புதிய படத்திற்கான அப்டேட் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.