காதணி விழாவுக்கு உயிர்தெழுந்து வந்த தாய் மாமன் : பாசத்தை இப்படி கூட காட்டலாமா.. நெகிழ வைத்த அக்கா பாசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 11:38 am

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து நடந்த வினோத காதணி விழா ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி – பசுங்கிளி தம்பதியினர். இவர்களது மகன் பாண்டித்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 21.

அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது. பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய மடியில் அமர வைத்துதான் காதணி விழா நடத்துவேன் என விடாப்பிடியாக இருந்த சகோதரி தனது தம்பியின் உருவத்தி மெழுகு சிலையை தயாரித்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக தாய்மாமனின் மெழுகு சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது. அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது.

இதுபற்றி பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறும்போது, அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டி துறையில் நீண்ட நாள் கனவு ஆகும்.

இதனை அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்றில் இறந்து போனார். இதில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரை அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம்.

இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது. பேரக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது. என் மகளின் ஆசையும் நிறைவேறியது என ஆனந்த கண்ணீருடன் கூறினார்.

இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டன்சத்திரத்தில் இதுபோன்ற வினோதமான முறையில் சிலையில் அமரவைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?