சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த சித்தப்பா… வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 5:00 pm

தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு மதுவை கட்டாயமாகக் கொடுத்து, அதை சிறுவர்கள் குடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமானுரை சேர்ந்தவர் அஜித் ஆட்டோ மற்றும் மினி லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் என்பவர் அவரது அண்ணன் மகனான சிறுவன் முன்பு மது பாட்டிலை கீழே வைத்து மது அருந்துவது போன்ற வீடியோவை பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: 9ஆம் வகுப்பு மாணவியின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்த மாணவர்கள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அந்த சிறுவன் மதுவை அருந்திவிட்டு இறைச்சியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அந்த சிறுவன் சாப்பிடுகிறான். மேலும் அந்தச் சிறுவன் மது அருந்தும் போது மது பாட்டில் அருகிலேயே பீர் பாட்டிலையும் ஒருவர் வைக்கிறார்.

அந்த சிறுவன் மது குடிப்பது போன்ற வீடியோ எடுத்து அந்த வீடியோவில் மை அண்ணன் மகன் என பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

சிறுவர்கள் மது அருந்தக்கூடாது என அரசு பலமுறை எச்சரித்தாலும் ரீல்ஸ் மோகத்தால் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமனூரில் சேர்ந்த அஜீத் என்பவர் அவரது அண்ணன் மகனை மது குடிக்க வைத்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Uncle force to boy drink alcohol

இது போன்று செய்யக்கூடாது என இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!
  • Leave a Reply