தலைக்கேறிய போதை… டீக்கடைக்குள் புகுந்த சொகுசு கார்… டீ குடித்துக் கொண்டிருந்த மூதாட்டி பலி!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 6:16 pm

ராமநாதபுரம் அருகே கீழக்கரை டீ கடைக்குள் புகுந்த சொகுசு கார் மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் நாராயணன் சாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் மது போதையில் இருந்த ஒருவர் காரை இயக்கியதாகவும், கட்டுபாட்டை இழந்து கார் டீக்கடைக்குள் அதிவேகமாக உள்ளே சென்று மோதியதில், தெற்கு வேளானுர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி என்ற 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கீழக்கரை லட்சுமிபுரத்தை சார்ந்த கோவிந்தன் என்பவர் சேலத்தில் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருடைய தம்பி மகளின் காது குத்துக்காக கீழக்கரை வந்துள்ளார். ஊருக்கு செல்லும் பொழுது புதிய பேருந்து நிலையம் அருகில் நிறுத்திவிட்டு வெளியே சென்றதாகவும், அவரோடு பயணித்த நபர் காரை ஓட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை காவல்நிலைய காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், டீக்கடைக்குள் புகுந்த காரை ஜேசிபி உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. இறந்தவர் உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ