தாராபுரம் : திமுகவிற்கு எதிர்ப்பு காட்டி பாஜகவினர் தாராபுரம் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். பாசன சங்க தேர்தல் விவகாரம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாசன சங்கத் தேர்தலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் உதவியுடன் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பாஜகவினர் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
உப்பாறு அணை. பி.ஏ.பி, அமராவதி அணை உள்ளிட்ட தாராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட 31 பாசன சங்க தேர்தலில் 31 பாசன சங்க தலைவர்களும் 136 ஆட்சி மண்டல குழு உறுப்பினர்களுக்கு136 ஆட்சி மனற் குழு உறுப்பினர்களான தேர்தல் இன்று 17 ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த கடந்த 8ஆம் தேதி வேட்புமனு இறுதி பரீட்சை நிலை அன்று தி.மு.க. வை சார்ந்தவர்கள் 136,பேர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் திமுகவினர் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதாக கோட்டாட்சியர் அறிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிலையில் பாஜகவினர் பாசன சங்க தேர்தலில் போட்டியிட்ட அதிமுக- பாஜக- மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் ஒரே இடத்தில் கூட தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனக்கூறி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா சாலை புதிய பேருந்து நிலையம் ஐந்து சாலை சந்திப்பு தாலுக்கா அலுவலகம் எதிரே சின்னக்கடை வீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் அடித்து பாஜகவினர் திமுக அமைச்சர் கயல்விழி மற்றும் கோட்டாட்சியர் குமரேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்து உள்ளது தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் அடித்த போஸ்டரில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன:
கண்டிக்கிறோம்… தி.மு.க. ஆட்சியில் அராஜகம், தேர்தலில் நின்று மக்களை சந்திக்க வக்கற்ற தி.மு.க.வை கண்டிக்கிறோம். தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர் போல் செயல்படும் தாராபுரம் சார் ஆட்சியர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்… உள்ளாட்சி, பாசன சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தி.மு.க வைத்தவிர யாரும் வெற்றி பெறக்கூடாது என சபதம் ஏற்று இருக்கும் அமைச்சர் கயல்விழி அவர்களின் கணவர் செல்வராஜ் அவர்களும் தாராபுரம் சார் ஆட்சியரும் இணைந்து நடத்தும் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.