ஒரே ஒரு ஜிலேபிக்கா இப்படி? ஓயாத அன்னபூர்ணா விவகாரம்.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
16 செப்டம்பர் 2024, 1:59 மணி
Cream Bun
Quick Share

கோவையில் கடந்த செப்டம்பர் 11 – ம் தேதி புதன்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்.எஸ்.எம்.இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன் கலந்து கொண்டு, உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விதிக்கப்படும் மாறுப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக குரல் எழுப்பினார்.

இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, மறுநாள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பா.ஜ.க வானதி சீனிவாசன் எம் எல் ஏ விளக்கம் அளித்தார்,

மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பா.ஜ.க மன்னிப்பு கோரி உள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.

இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். மேலும், எங்களது விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியிருக்கிறார்.

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் தி.மு.க அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது” என்று வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

இதை அடுத்து கோவை அன்னபூர்ணாவின் கிரீம் பன் வாங்க சமூக வலைதள பிரபலங்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் உடன்பிறப்புகள் ஹோட்டலுக்கு படையெடுத்து வாங்கி வருகின்றனர்.

அதில் முகநூல் பக்க பிரபலம் ஒருவர் வீடியோ பதிவு செய்து உள்ளார். அதில் 10 மணி வரைக்கும் காத்து இருந்து கிரீம் பன் வாங்கியது எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம். இந்தியா முழுவதும் கோயமுத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் ஒன்று இந்திய அளவில் பேமஸ் ஆகி பேசிக் கொண்டு உள்ளனர்.

உரிமையாளர் சீனிவாசன் அந்தப் பேச்சு தான் அது உண்மையா ? என்று பார்ப்பதற்கு கிரீம் பன், ஜிலேபி மற்றும் மிச்சரை வாங்கினேன், மூன்றுக்கும் வித்தியாசம் உள்ளதாக அவரை கூறினார். அதைப் பற்றி அறிய காலையிலே வீட்டின் அருகே உள்ள அன்னபூர்ணா சென்று உணவு அருந்தியதாகவும், அதில் ஐந்து சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி போடப்பட்டு இருந்ததாகவும் வாங்கிய ரசீது பதிவு செய்து இருந்தார்.

சாப்பிட்டு முடித்த பிறகு கிரீம்பன் 10 மணிக்கு பிறகு தான் வரும் என்றார்கள். காத்து இருந்து கிரீம் பன், ஜிலேபி மற்றும் மிச்சர் வாங்கியதாகவும், பத்து மணி வரைக்கும் காத்து இருந்து கிரீம் பன் வாங்கியதற்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம் என்றும் கிரீம்பன் ரசீது ஐந்து சதவீதம் தான் ஜி.எஸ்.டி என்று போட்டு உள்ளனர்.

அவர் கூறியது 18 சதவீதம் என்றார். மிச்சர் பன்னிரண்டு சதவீதம் தான், ஜிலேபி 5 சதவீதம் தான் ஜி.எஸ்.டி போட்டு உள்ளது என்று அவர் வாங்கிய ரசீதை பதிவு செய்து அவர் வாங்கிய கிரீம் பன்னை அங்கேயே சாப்பிடும் வீடியோ பதிவு செய்து அவர் வாங்கி கிரீம் பன்னிற்கு 5 % ஜி.எஸ்.டி தான் கொடுத்ததாகவும், வேறு யாரேனும் 18 சதவீதம் கொடுத்து இருந்தால் பதிவு செய்யவும் எனக் கூறி இருந்தார்.

அந்த வீடியோ மட்டுமல்லாது அன்னபூர்ண ஹோட்டல் ரசீதுகளான அதிக ஜி.எஸ்.டி உள்ள ரசீதுகள் மற்றும் ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி உள்ள ரசீதுகள் பல்வேறு மீம்ஸ்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 135

    0

    0