கல்லூரிக்குள் புகுந்த லுங்கி பாய்ஸ்… மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல் ; ஒரு பெண்ணுக்காக நடந்த கலவரம்..!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 7:14 pm

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளி பகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்து கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த டவசர், லுங்கி அணிந்து கொண்டுவந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர். ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல், திடீரென கல்லூரி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

கல்லூரி மாணவர்களை வெளி பகுதியை சேர்ந்த கும்பல் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

மாணவர்களுக்கு இடையே கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்னையை கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்து கொண்டிருக்கும் வேளையில், வெளியில் இருந்து வந்த 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் மாணவர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!