டாஸ்மாக் சூப்பர் வைசருக்கு அரிவாள் வெட்டு… கல்லாவில் இருந்த பணத்தை பறிக்க முயற்சி ; கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 2:21 pm

திருச்சி அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சிசித்த நிலையில், கிராம மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அரசு மதுபான கடையில் மேல மங்காவனத்தை சேர்ந்த பாண்டியன்( 47) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் அரிவாள் மற்றும் கத்தியுடன் வந்து இறங்கி பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கல்லாவில் உள்ள பணத்தை கொடுக்குமாறு கூறி பாண்டியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, பாண்டியன் சத்தம் இட்டு உள்ளார். அதைக் கேட்டு அந்தப் பகுதியை சேர்த்த பொதுமக்கள் திரண்ட நிலையில், அந்த மர்ம கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது.

இச்சம்பவம் பற்றி திருநெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாண்டியனை விட்டுவிட்டு அந்த வழியாக வந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த காரில் வந்து மர்ம கும்பல் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றதை தொடர்ந்து அந்த காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர்.

காயமடைந்த பாண்டியன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பாண்டியனை வெட்டி சென்று மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கீழ மாங்காவனம் அரசு மதுபான கடையில் ஏற்கனவே திருட்டு நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ