மதுரை, கோவை மெட்ரோ பற்றி வாயை திறக்காத மத்திய அரசு.. தமிழக மக்களுக்கு அநீதி : எம்பி பரபர குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 3:58 pm

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில் மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது, சாலை சேதம் காரணமாக மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக வேண்டும், மதுரை மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை 91 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட 34 சாலைகளை போர்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் 127 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்க மாநில அரசுக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை அனுப்பி வைத்துள்ளது, மேலமடை, கோரிப்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் பாலப்பணிகளுக்காக மாற்று சாலைகள் அமைக்கவில்லை, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், மதுரையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்,

மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சாலைகள் சேதமடைந்து உள்ளதால் மதுரை மாநகர் பகுதிக்குள் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது, சாலை தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்ககூடிய தனி புகார் எண் வெளியீட வேண்டும், மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நயவஞ்சகத்தின் முழு இலக்கணத்தை மோடி அரசு எழுதி கொண்டு இருக்கிறது, சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 23,000 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் மாநில அரசின் திட்டம் என கைகழுவி உள்ளது, சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் குறித்து ஒன்றிய அரசு பேச மறுக்கிறது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் எம்ய்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட பதிலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எந்தவொரு தகவலுமில்லை, மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை திட்டத்தில் எத்தனை முறை டெக்னிக்கல் பிரச்சினை வரும் என தெரியவில்லை,

திட்டம் அறிவிக்கப்பட்டு 6 வருடங்கள் ஆகியும் டெண்டர் விடுவதில் சிக்கல் உள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ச்சியாக அநீதிகளை இழைத்து வருகிறது.

தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு 500 கோடி, 1000 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது, ஆனால் பின்ங் புத்தகத்தில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு அநீதி இழக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu