மயிலாப்பூர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் : விற்பனையாளருக்கு அட்வைஸ் செய்த வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 10:13 pm

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், மத்திய நிதியமைச்சர் திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார்.

மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலையோர கடைகளில் வந்து கீரை மற்றும் காய்கறியை வாங்கினார்.

அப்போது காய்கறி விற்பனை பெண் திடீரென நிர்மலா சீத்தாராமன் காலில் விழுந்தார். உடனே அவர் இதெல்லாம் பண்ணாதீங்க என்று அந்த பெண்ணிடம் அறிவுரை கூறினார்.

இதனையடுத்து காய்கறிகளை வாங்கி கொண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். பின்னர் விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!