இந்தியாவில் வர்த்தகம் எளிதாக பிரதமர் மோடியே காரணம் : கோவையில் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 9:47 pm

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபேர் 2022 இன்று தொடங்கியது.

இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், சைமா ஜவுளி கண்காட்சியில் சர்வதேச அளவிலான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளது.

ஜவுளித்துறை சார்ந்த விஷயங்களை திருப்பூர் தொழில் துறையினருடன் கலந்துறையாட உள்ளேன்.
ஏற்றுமதியில் மேக் இன் இந்த்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்படுள்ளது.

இதன் மூலம் கோடிக்கனக்கானோருக்கு வேலை வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. புதிய பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் தொழில் துறையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

சர்வதேச தலைவர்களுடன் பிரதமரின் நட்புறவு காரணமாக வர்த்தகம் எளிதாகியுள்ளது. பருத்தி குறைந்த விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தமிழகத்தில் என்.டி.சி. ஆலைகள் லாபகரமாக இயங்காததே தொடர்ந்து செயல்படாததற்கு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 572

    0

    0