Categories: தமிழகம்

மத்திய பட்ஜெட் வேளாண்மையை இரட்டிக்கும் பட்ஜெட்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு..!!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்தான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் . சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

இந்த பட்ஜெட் அடுத்த 25 வருடங்களுக்கு நாட்டிக்கு தேவையானதை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விமானநிலையம், துறைமுகம், நீர்வழிச்சாலை உட்பட போக்குவரத்திற்கான 7 கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருப்பாதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் நாமக்கல் முசிறி 4 வழி சாலை அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ரயில்வேயில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும், சிறு குறு தொழில்களின் பொருட்களை கொண்டு செல்ல ஓன் ஸ்டேசன் ஓன் புராடக்ட் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பட்ஜெட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும் வேளாண்மையை இரட்டிக்கும் விதமாக இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்த அவர் தொழில் முனைவோர்களும் வல்லுநர்களும் கூட இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதாக தெரிவித்தார். கோதாவரி பொன்னாறு காவேரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு பாசன வசதி விரிவாக்கம் செய்யபடும் எனவும் இதனால் மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தபடுவதாக தெரிவித்தார்.

கொரொனாவால் கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பி.எம் இ வித்யா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது எனவும் 200 சேனல்கள் மூலம் தரமான கல்வி பயிற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் பல்கலைகழகம் , டெலி மெடிசன்ஸ் , அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்றவைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பி.எம். கரிசக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதில் 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் அனைத்து மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

8 hours ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

8 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

9 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

10 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

10 hours ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

11 hours ago

This website uses cookies.